Saturday, November 5, 2011

வானிலை அறிக்கை

வங்க கடலில் மையம் கொண்டுள்ளது,
காற்று அழுத்த தாழ்வு மண்டலம்!
என் நெஞ்சக் கடலில் மையம்
கொண்டுள்ளது,
உன் காதல் அழுத்த தாழ்வு மண்டலம்.
வான் மழையின் ஈரம்
நிலத்தில் காய்ந்து போகலாம்
உன் காதல் மழையின் ஈரம்
என் நெஞ்சில் என்றும் மிச்சமிருக்கும்.

Monday, August 15, 2011

நாங்கள் நாடோடிகள்

பிறந்த ஊரிலேயே,
பிழைக்க வழி இருந்தும்,
படித்த படிப்பு, எங்கள்
பிடரியைப் பிடித்து
வெளியே தள்ளியது.
அறிவியலோ, பொறியியலோ, மென்பொருளோ,
எங்கள் விதி வழியில் வேறுபாடில்லை.
பெண்களே, உங்களுக்காவது
ஒரு புகுந்த வீடு தான்
எங்களுக்கோ, பல புகுந்த ஊர்கள்.
அறிமுகமே இல்லாதவர்கள்
அறைத்தோழர்கள் ஆவார்கள்.
அரிசியும் பருப்பும் நாங்கள்
வாங்கி சமைப்போம்,
பல குடும்பங்கள் இருந்தும்
ஒரே கூட்டு குடும்பமாய்
இருப்போம்,
அதுவும் எங்களுக்கு நிரந்தரமல்ல,
அப்போதும் நாங்கள் ஊர் மாறுவோம்,
மணமான பின்னாலும்,
மற்றுமொரு முறை ஊர் மாறுவோம்,
பிள்ளைகள் பிறந்த பின்னர்,
பிறிதொரு முறை ஊர் மாறுவோம்;
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
எங்களுக்கும் சாலப் பொருந்தும்,
அன்னியர்கள் எங்களுக்கு நண்பரானார்கள்
ஆனால் பிறந்த ஊர்
எங்களுக்கு அந்நியமாகிப் போனது,
ஆம், நாங்கள் நாடோடிகள்.

Saturday, August 13, 2011

நிலவில்லா வானம்

விடுமுறைக்காய் வீடு செல்கின்றேன்,
பேருந்தில் பேசிக் கொண்டனர்,
இன்று பௌர்ணமியாம்!
பாவம், அவர்களுக்கு தெரியாது,
இன்னும் மூன்று நாட்களுக்கு
என் வானில் அமாவசை என்று!!!

வானவில்

நிலவையும்,
வானவில்லையும்,
ஒன்றாகப்
பார்க்க முடியாதாம்?!
யார் சொன்னது,
அதோ, என்னவளின் கண்கள்!!

தொடுகை

உனது கணினியின்
விசைப்பலகை ஆகவேணும்
மாறிவிட வரம் கொடு!
அதைதானே நீ
அதிகம் தொடுகிறாய்.!!

நிறுத்தம்

உன் பேருந்து நிறுத்தத்தில்
நீ இறங்கியதும்
நகர்ந்து விடுகின்றது,
பேருந்து!
நகர மறுத்து
அங்கேயே நின்றுவிடுகின்றது
என் மனது.

இடைவேளை

தேநீர் எவ்வளவு
இனிப்பாக இருந்தாலும்
நீ இல்லாத
தேநீர் இடைவேளைகள்
இனிப்பதில்லை எனக்கு.
பிடித்த உணவாயினும்
நீ இல்லாத
உணவு இடைவேளைகள்
பிடிப்பதில்லை எனக்கு.

தேவதைகளின் சாபம்

நீ உண்ட
மிச்ச பருக்கைகளை
உண்ட காக்கைகளை
காணவில்லையாம்,
ஓ! சாபம் நீங்கி
தேவதைகள் ஆகிவிட்டனவோ!!

வெறுமை

இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தும்
நீ இல்லாத போது
எனக்கு வெறுமையாய்
தெரிகின்றது
நம் அன்றாடப் பேருந்து!!

Friday, August 12, 2011

யாருக்கும் தெரியாமலிருந்தும்
எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.
நான் அவளையே பார்ப்பதாக!!!
எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
அவள் யாருக்கும் சொல்லவில்லை
அவளும் என்னைப் பார்ப்பதை!!!

Thursday, August 11, 2011

நீ பூத்த புன்னகை எனக்கா?
தெரியாது!!!!
ஆனால்
உன் புன்னகையை பார்த்து
எனக்குள் பூத்த பூ
என்றும்
உனக்காகத்தான்!!!!

Saturday, April 9, 2011

கனவு நிஜமானது

முன் குறிப்பு: கவிதை நடையில் படிக்கவும்
* இரண்டு முறை படிக்கவும்.


இந்திய அணியின் இமயமே
இணையற்ற சச்சின் டெண்டுல்கர்
இன்னொரு செஞ்சுரி அடித்தால் நீ ஹன்றடுல்கர் *
உன்னோடு ஆடியவர்களெல்லாம் எப்போதோ
வீட்டிற்கு பேக் அப்
பொறுமையாய் காத்திருந்து நீ
வாங்கி விட்டாயே வேர்ல்ட் கப்*
அரசியல்வாதிகள் சொல்வார்கள்
நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று
உண்மையில் அது உனக்குத்தான் பொருந்தும்
ஏனென்றால், நீ கிரௌண்டில் நின்றாலே அது ரெகார்ட்
நீ அடித்தாலே அது ஹிஸ்டரி .

இமயத்தின் பிரதிபலிப்பே
இணையில்லா வீரேந்திர சேவாக்,
ராக்கெட் உயரே செல்ல அதன் முதல் என்ஜின் முக்கியம்
இந்திய அணியின் ரன் உயரே செல்ல
முதலில் இறங்கும் நீ தான் முக்கியம்
பைனலில் உன் காலில் பந்து பட்டதால் நீ போனாய்
பரவாயில்லை போ, யானைக்கும் அடி சறுக்கும்
பில்டிங் பின்னால் வீக் ஆனாலும் ,
உன் basement எப்போதுமே ஸ்ட்ராங் தான்,


இந்தியாவிற்கு உலகக் கோப்பையை ஈட்டிய 'சிங்'கமே
மகேந்திர 'சிங்' தோனி
பைனலில் தள்ளாடிய இந்திய அணியை
நீ கரை சேர்த்த தோணி*
என்னடா பொறுப்பில்லாமல் விளையாடுகிறான்
என்று ஏசியவர்களின்
வாய்க்குப் போட்டதே பூட்டு
உன் கையிலிருக்கும் பேட்டு*
நீ பிறந்த ஊர் ranchi, தெரியும்
உன் எனர்ஜிக்கு காரணம்
உன் மனைவி சாக்ஷி யா
பைனலில் முதுகுவலி
உனக்கு வந்தது ஏனென்றால்
நூறு கோடி இந்திய மக்கள்
உன்மேல் அல்லவா வைத்தார்கள்
உலகக் கோப்பை நம்பிக்கையை,
கலக்கும் காப்டன்சியில் பாண்டிங் க்கிற்கு
பிறகு உன்னைத் தான் பார்க்கிறேன்!!
பன்க் வைத்தாலும் நீ ஹீரோ
மொட்டை அடித்தாலும் நீ ஒரு சூப்பர் ஹீரோ.

இமயங்களுக்கு அடுத்து வரும் சிகரமே
உன் தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட் கெளதம் கம்பீரமே
பெரியவர்கள் இல்லாத வீட்டில் மூத்த பையனின்
மேல் விழும் பொறுப்புகள்
சச்சின், சேவாக் விக்கெட் வீழ்ந்த பின்
உனக்கு தானே வந்தது அந்த பொறுப்பு
ஒரு காலத்தில் சச்சின், சேவாக் அவுட் என்றால் மேட்ச் அவுட்,
உன்னால் இப்போது அந்த நம்பிக்கையே அவுட் *
நூற்றுக்கு மூன்று குறைந்ததே என வருந்தாதே
உன் தொந்நூற்றுயேழு படிக்கட்டில் ஏறித்தான்
தோனி வாங்கினார் கோப்பையை
சட்டையில் படிந்தாலும், உன் ஆட்டத்தில் படியவில்லை கறை
கடைசி வரை கறை படிந்த சட்டையோடே ஆடினாய்
அப்போதுதான் தெரிந்தது " கறை நல்லது"


ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
இந்திய அணிக்கு நீ தானே யுவ ராஜா
அதிரடி பேட்டிங்கிற்கு ஒரு அப்ரிடி
பீல்டிங்கிற்கு ஒரு கைப்
ஸ்பின்னுக்கு ஒரு ஹர்பஜன் சிங்
மூவரும் சேர்ந்தவன் நீ தானே யுவராஜ் சிங்
ஆறு பந்துகளுக்கு முப்பத்திஆறு ரன்கள் தேவையா
கவலை வேண்டாம், களத்தில் யுவராஜ்*

அதென்ன உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்
உனக்கு உன்மத்தம் பிடித்து விடுகிறது
உனக்காகவேனும் உலகக் கோப்பையை
ஆண்டுக்கொருமுறை நடத்த வேண்டும்


சுழற்பந்து சூறாவளியே
ஸ்பின் கிங், ஹர்பஜன் சிங்!
நீ போடும் பந்து செய்கிறதே "dancing"
அது தாண்டுகிறதே பேட்ஸ் மேனின் "fencing"
திரும்பி பார்த்தால் "stump missing"

உன் பந்து வீச்சிற்கு பேர் "தூஸ்ரா"
நீ வீசினால் எதிரணி "தூசிரா"
விக்கெட் காலி, நீ ஆடிக்கோ "பாங்க்ரா"


பாலிவுட்டில் உண்டு பல "கான்"
இந்திய அணிக்கு நீ ஒரே "கான்"
வெயிலுக்கு இதமானது பாதாம் கீர்
வேகப் பந்து வீச்சுக்கு நீ தான் ஜாகீர்
லகானில் ஜெயித்தவர் அமீர் கான்
இந்திய அணிக்கு லகான் ஜாகீர் கான்
பைனலில் நீ போட்ட ஓவர்கள்
இந்திய அணியின் வின்னிங் saver கள்


இன்னும் முடியவில்லை, இதோ இளம் ரத்தங்கள்

சுழன்றடிக்கும் சூறாவளியே சுரேஷ் ரெய்னா
நீ அதிரடியாய் பொழியும் ஆலங்கட்டி" rain" ஆ

விடிவெள்ளி நம்பிக்கையே விராட் கோலி
அதிரடி பேட்டிங்கில் சீரும் சண்டைக் கோழி

கேரம் பால் வித்தகனே அஷ்வின்
உன்னால் தானே quarter finals மேட்ச் வின்

இன்னும் உண்டு இந்தியாவின் ஒவ்வொரு சந்திலும்
சாதிக்கப் பிறந்தவர்கள்,
இன்னும் ஐந்து ஆண்டுகள் இன்புற்றிருக்க
வென்றே விட்டோம் உலக கோப்பையை!!!


முடிந்து போனது உலகக் கோப்பை உற்சவம்
ஆரம்பமானது IPL கோலாகலம்,
இலவச டிவி ல நீ பாரு மேட்சு
யார் ஆட்சிக்கு வந்தால் உனக்கென்ன போச்சு?