அதிகாலை மழை, வேலைக்கு செல்வோர் அலுத்துக் கொள்கின்றனர்,
சே, இந்த மழைக்கு நேரம் காலமே தெரியாது!!!
மதிய மழை, விவசாயி சலித்துக் கொள்கிறான்,
சே, இந்த மழைக்கு விவஸ்தையே கிடையாது!!!
மாலை மழை, குழந்தைகள் அழுகின்றன,
சே, இந்த மழையால விளையாட போக முடியல!!!
இரவு மழை, பிளாட்பார வாசிகள் முனகுகின்றனர்,
சே, தூங்க விடாம பண்ணிடுச்சி இந்த மழை!!!
எதை பற்றியும் கவலைப் படாமல், எல்லோரும் இன்புற்றிருக்க செய்வதே
என் கடன், என்று விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை!!!
மழை!!!
ReplyDelete:-)