தோழமைக்கு வணக்கம்,
நான் எழுதும் முதல் வலைப்பூ இது....
யோசித்து பார்க்கும் போது நாம் எல்லாம் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் என்றே எனக்கு தோன்றுகிறது.
போயின ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு இப்படி வலைப்பூ எழுத வாய்ப்பு கிடைத்ததில்லையே !!!!!! அவர்களின் படைப்புகள் இதழ்களின் உதவி ஆசிரியர்களிடம் மட்டுமே கிடைத்தன. அவர்கள் விரும்பினால் மட்டுமே படைப்புகள் வெளி வரும் அல்லது சில சமயம் வீட்டுக்கு வரும்....
இப்பொழுதோ நம் சொந்த கருத்துக்களை நாம் பதியலாம். மற்றவர் விரும்பினால் படிப்பார் நமக்கு இடுகையும் இடுவர்.
ஆகவே தான் நானும் வலைப்பூ எழுத தொடங்கிவிட்டேன், இந்த வலைப்பூக்களை பலர் பல விதங்களில் பயன் படுத்தினாலும், நம்மைப்(?) போன்ற எழுத்தாளர்களுக்கு இது பெரும் ஊடகமாக இருக்கின்றது. அவ்வப்போது, என் மனதின் உளறல்களை இதில் கிறுக்கி விடுகிறேன். பிடித்திருந்தால் படியுங்கள்.
எப்பொழுதும் நன்றியுடன்,
No comments:
Post a Comment